அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் சாத்தூர் அருப்புக்கோட்டை திருச்சுழி தொகுதி பாகச் செயலாளர்கள் பாக பொறுப்பாளர்கள் நியமன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் சாத்தூர் அருப்புக்கோட்டை திருச்சுழி தொகுதி பாகச் செயலாளர்கள் பாக பொறுப்பாளர்கள் நியமன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..;
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் சாத்தூர் அருப்புக்கோட்டை திருச்சுழி தொகுதி பாகச் செயலாளர்கள் பாக பொறுப்பாளர்கள் நியமன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. அருப்புக்கோட்டை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் சாத்தூர் அருப்புக்கோட்டை திருச்சுழி தொகுதி பாக செயலாளர் பாக பொறுப்பாளர்கள் நியமன ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இதில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பாகச் செயலாளர்கள் பாக பொறுப்பாளர்கள் குறித்து கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் ஆலோசனைகளை வழங்கினார்.. பின்னர் நிர்வாகிகளுக்கு பாகப் பொறுப்பாளர்களுக்கான பூர்த்தி செய்யப்பட வேண்டிய விண்ணப்ப படிவங்களை வழங்கினார். மேலும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரன் தலைமையில் திமுக மற்றும் மதிமுக கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் எஸ் ஆர் ராஜவர்மன், மணிமேகலை, சிவசாமி, எஸ் ஜி சுப்பிரமணியன் விருதுநகர் கிழக்கு மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.