சீமான் பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது நதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு;

Update: 2025-02-03 06:49 GMT
ஈரோடு பெரியார் நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்து இருந்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது. ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த ஒன்றிணைகின்றன. அதிமுக வாக்காளர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து, நீங்கள் திமுகவிற்கு போடாவிட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர். எங்களைக் கண்டு இவ்வளவு பயப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதிமுக, பாஜகவினர் சில உதிரிகளை வைத்து பெரியாரை விமர்சனம் செய்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் உதிரிகள் அல்ல; உறுதியானவர்கள். நாங்கள் உறுதியாய் தனித்து தேர்தல் களத்தில் நிற்கிறோம். உதிரிகளை கூட்டணி சேர்த்து திமுக நிற்கிறது.நாங்கள் பெரியரை விமர்சிக்கவோ, இழிவாகவோ பேசவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக பெரியார்தான் எங்கள் மொழியை, இனத்தை இழிவுபடுத்தியுள்ளார். பெரியார் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். நாங்கள் பெரியார் பேசியதை பேசி அரசியல் செய்கிறோம். என் கருத்துக்கு எதிர்கருத்துக்கு கூறாமல் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். பெரியார் இல்லாமல் ஒன்றுமில்லை என்பது அவர்களின் கருத்து. பெரியாரால் ஒன்றுமில்லை என்பது எங்கள் எங்கள் கருத்து. தமிழரான எங்களுக்கு திராவிடன் என பெயர் வைக்க வேண்டாம். எந்த நேரத்தில் எந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார். அதுபோல நான் இப்போது பெரியாரை விமர்சிக்கிறேன். சனாதனத்தை ஒழிப்பதாக சொன்ன துணை முதல்வர் உதயநிதி, ஆதிதிராவிடர்களோடு அமர்ந்து உணவருந்துவதாக ஒரு விளம்பரம் வருகிறது. இதுதான் உண்மையான சனாதானம் என்பதை உணர்ந்து உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தமிழர்கள். கோபம் வராவிட்டால் நீங்கள் திராவிடர்கள்.தமிழக மீனவர்கள் சுடப்படும்போது, நான் இந்த நாட்டு மீனவர் இல்லையா என்று கேட்டால் அது தமிழ் தேசியம். கச்சதீவை கொடுத்தது கொடுத்தது தான் என்றால் திராவிடம். கச்சத்தீவை திரும்ப எடுப்போம் என்றால் தமிழ்தேசியம். தமிழை சனியன் என்று இழித்து பேசுவது திராவிடம். தமிழ் எங்களுக்கு உயிர், முகம், முகவரி, மூச்சு, பேச்சு என்று பேசுவது தமிழ்தேசியம். 60 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்து வாக்கை பறித்து மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏழையாய் வைத்திருப்பது திராவிடம். தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றும் தற்சார்பு வாழ்க்கையைத் தருவது தமிழ் தேசியம். மதிப்புமிக்க வாக்குகளை விலைக்கு விற்கும் நாடும், மக்களும் உருப்படமாட்டார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடப்பது கடுமையான போர். இந்த போரில், எங்களுக்கு கை கொடுப்பது தமிழர்களின் கடமை. ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். என் வீட்டைப்போல நாட்டை பார்த்துக் கொள்வோம். என் தாய் மண்ணை என்னை விட எவரும் நேசிக்க முடியாது. என் மொழி, இனத்தின் மீது பெரியாருக்கு ஏன் வன்மம்? என் தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன சனியனை ஒழிக்க வேண்டும். தமிழ் தேசியம் மரத்தை, மலையை, ஆறு, ஏரிகளை நேசிக்கும். இயற்கையின் அரும்பெரும் கொடையை கொண்டாடும். திராவிடம் அதனை வியாபாரம் செய்து பணம் பார்க்கும். இதில் நீங்கள் எந்த பக்கம் நிற்கப்போகிறீர்கள்? பொதுமக்களுக்கு கிடைக்காத நீர், அதை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு எப்படி கிடைக்கிறது? எல்லா உயிரினங்களின் உயிர் தேவை நீர். 2 சதவீதம் உள்ள நீரை 20 சதவீதமாக மாற்ற யாரும் யோசிக்கவில்லை. எப்படி வியாபாரம் செய்வது என்பதையே யோசிக்கின்றனர்.கல்வி, மருத்துவம், நீர் இந்த மூன்று விற்பனைக்கு வந்து விட்டால் நாடு சுடுகாடு ஆகி விடும். சேர, சோழ, பாண்டியர் காலத்தில் கிடைக்காத வசதிகள் காமராஜர் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்தது. அவர் பள்ளிகளை திறந்தார். இவர்கள் டாஸ்மக்கை திறக்கின்றனர். ஒரு நேர்மையாளர் வாக்கிற்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும். உழைக்கும் என்னிடம் இல்லாத பணம், உழைக்காத உன்னிடம் எப்படி வந்தது என்று ஒரு முறை அவர்களிடம் கேளுங்கள் .தொடர்ச்சியாக தேர்தலில் தோற்றால், உன் கட்சிக்காரர்கள் சோர்ந்து விடுவார்களே, பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றனர். இன விடுதலை என நிற்கிற என் தம்பிகளை அற்ப பதவியால் ஒன்றும் செய்ய முடியாது. ஆழ்ந்து சிந்தித்து எந்த பக்கம் நிற்க போகிறோம் என்பதை முடிவு எடுங்கள்.நமக்கு பின்னால் வரும் சந்ததிக்காக நாங்கள் பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் செய்யும் தமிழ்தேச அரசியலை இவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்கும்போதுதான், நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பது புரிகிறது. பெரியாரை பேசினால் எனக்கு ஓட்டு விழாது. அந்த ஓட்டு எனக்கு வேண்டாம். வள்ளளார், வைகுந்தரை விட பெரியார் என்ன சீர்திருத்தம் செய்து விட்டார்? எல்லா எலியும் எழுந்து வந்து ஒரு புலிக்கு முன்னாள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.இலங்கையில் தமிழர்களைக் கொன்றபொது, தமிழர் ஒருவரின் கையில் அதிகாரம் இருந்து இருந்தால் அந்த போரை நடத்தி இருக்க முடியுமா? கழிவறை, குடிப்பறை இரண்டைத் தவிர எல்லாவற்றிற்கும் கருணாநிதி பெயர் சூட்டுகின்றார். துரோகம் என்ற சொல்லுக்கு கருணாநிதி என்று பொருள். இந்த நாட்டை என் நாடு என்று சொந்தம் கொண்டாட தமிழனுக்கு மட்டும் தான் உண்டு என்று அம்பேத்கார் சொல்லியிருக்கிறார். இலங்கையில் என் இனத்தை அழிக்க, நான் கொடுக்கும் வரியில் இருந்து ஆயுதம் வாங்கி தந்தார்கள். இலங்கை நட்பு நாடு என்றால், தமிழர்கள் யார்? அவர்கள் வேண்டுமென்றால், எங்களை விட்டு விடுங்கள். இலங்கை போரின் போது, காலையில் உணவு அருந்தி விட்டு, மதிய உணவுக்கு வீடு திரும்பும் வரை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். போர் முடிந்து விட்டது என அவர் சொன்னதை நம்பி பதுங்கு குழிகளை விட்டு வெளியே வந்தவர்களை மொத்தமாக குண்டு போட்டு கொன்றார்கள். இவர்களுக்கு நாம் வாக்கு செலுத்த முடியுமா? தமிழ் மொழியை அசிங்கப்படுத்திய ஒருவரை, தந்தை என்று போட்டுக் கொள்வது தமிழினம் மட்டும் தான். தாய்ப்பால் போல் தாய்மொழிக் கல்வி அவசியம் என்றார் காந்தி. உன் மொழியை உலகின் மூத்த மொழியை அசிங்கமாக பேசினால் விட முடியுமா? வீட்டுக்கு தகப்பனை, நாட்டுக்கு தலைவனை கடன் வாங்க முடியாது. என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது. ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விட மாட்டேன். பெரியாரால் இந்த நிலத்தில் என்ன நடந்தது? சமூகநீதி, சாதி ஒழிப்பு, பெண்ணிய உரிமை இதெல்லாம் திராவிடத்தில் வெறும் சொல். தமிழ் தேசியத்தில் அது செயல். பிரபாகரனை னை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம். இலங்கையில் போரை நிறுத்தவும், பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா விரும்பியது. ஆனால், கங்கிரஸ் குடும்பமும், தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை. இலங்கை போரை விரைந்து முடிக்க அவர்கள் விரும்பினார்கள் என்று முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சிவசங்கர மேனன் எழுதி இருக்கிறார். பிரபாகரன் இருப்பது இவர்களின்ன் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதினார்கள்.13 கோடி தமிழ் சொந்தம் இருக்கும்போது, இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு கொடிய நிகழ்வு நடந்தது. பிரபாகரன் மகன் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பது தமிழக, இந்திய தலைவர்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால், பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்க்கூடாது என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் பாலச்சந்திரனைக் கொன்றார்கள். இதை மறந்து, கடந்து போக முடியுமா?இதற்கு காரணமானவர்களை வஞ்சம் வைத்து ருவருக்காமல் விட மாட்டேன். பேரரசுகள் சாம்ராஜ்யங்களே வீழ்ந்துள்ள போது உங்களை வீழ்த்துவது எம்மாத்திரம்? வீழ்ந்து விட்டதால் தான் இப்போது காசு கொடுத்து ஓட்ட் கேட்கின்றனர். சாதி பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளோம். ஈரோடு கிழக்கு மக்களுக்கு நான் யாருக்காக பேசுகிறேன் என்ற் தெரியும். உதட்டில் இருது அல்ல உள்ளத்தில் இருந்து பேசுகிறேன். உண்மையை, உரக்கப் பேசுவோம். உறுதியாக பேசுவோம். சத்தியத்தை சத்தமாக பேசுவோம்.என்னை தோற்கடிக்க துடிக்கிறது திராவிடம். நான் வீழ்வது மகிழ்ச்சி என்றால் திமுகவிற்கு வாக்களியுங்கள். வீழ்ந்த தமிழினம் எழ வேண்டுமானால், தன்மானத்தோடு மக்கள் வாழ வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள். கட்சிகளை, தலைவர்களை நம்பியது போதும். ஒருமுறை எங்களை நம்புங்கள். எங்களின் வெற்றி தமிழ் பேரினத்தின் வெற்றி. மக்களின் வெற்றி. அரசியல் புரட்சிக்கான வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்

Similar News