ராமநாதபுரம் கிராம பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது

மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது;

Update: 2025-02-03 07:20 GMT
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பனைக்குளம் சந்திப்பு நாடார்வலசை பகுதியில் பொது மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்றக் கோர கிராம மக்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கடந்த ஆக 28 ல் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் வருவாய், காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பெண்களிடம் சமரசம் பேசினர். இந்த இக்கடையை 2024 டிசம்பர் இறுதி வாரத்திற்குள் இட மாற்றம் செய்து விடுவதாக உறுதி அளித்தனர். உறுதிமொழி காலம் முடிந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படவில்லை. இக்கடையை அப்புறப்படுத்தும் வரை காத்திருப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தேவிபட்டினம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Similar News