சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.....
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.....;
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது..... நலிவுற்ற பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது .... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது இக்கோவிலுக்கு மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி நாகர்கோவில் தென்காசி சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் அம்மனை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் வாகனங்களிலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இன்று முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் காவல்துறையினர் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்கள் என பல நலிவடைந்த ஏழை மற்றும் பக்தர்களுடன் ஒன்றாக அமர்ந்து சமபந்தி விருந்தில் உணவருந்தினர். சமபந்தி விருந்து முடிந்த பின்னர் நலிவடைந்த ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன், திமுக ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.