திருப்பரங்குன்றம் இந்து முன்னணி போராட்டத்திற்கு வருமாறு துண்டு பிரசுரம் வழங்கிய விருதுநகர் பாஜக நிர்வாகி கைது...*

திருப்பரங்குன்றம் இந்து முன்னணி போராட்டத்திற்கு வருமாறு துண்டு பிரசுரம் வழங்கிய விருதுநகர் பாஜக நிர்வாகி கைது...*;

Update: 2025-02-03 12:09 GMT
திருப்பரங்குன்றம் இந்து முன்னணி போராட்டத்திற்கு வருமாறு துண்டு பிரசுரம் வழங்கிய விருதுநகர் பாஜக நிர்வாகி கைது... திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு பலியிட சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தர்காவில் ஆடு பலியிட அனுமதி அளிக்க கோரி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் மலையேறி காசி விஸ்வநாதர் கோயிலிலும், இஸ்லாமிய அமைப்பினர் மலையில் உள்ள தர்காவிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர். சர்க்காவுக்கு சென்ற தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரான ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி அளித்த பேட்டியில் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என குறிப்பிட்டதும், அவருடன் வந்தவர்கள் மழையில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதும் பெரும் சர்ச்சை ஆனது. திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி பிப்ரவரி 4-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்து முன்னணி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெருவில் பாஜக வின் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகரன்(56) திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு வருமாறு பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரம் வழங்கி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார், பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரபாகரன் கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜக மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா, இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் ஆகியோர் காவல் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News