விஜயை முதல்வர் ஆக்குவோம் தவெகவினர் உறுதிமொழி ஏற்பு

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா;

Update: 2025-02-03 13:41 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில், கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதை கொண்டாடும் வகையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேக்கரி சதீஷ் தலைமையில் பள்ளிபாளையம் நான்கு ரோடு சாலையில், பள்ளிபாளையம் ஒன்றிய, பேரூர், கழகம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் அவர்களை முதல்வராக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு, விஜய் அவர்களின் உருவப்படத்திற்கு திருஷ்டி பூசணிக்காய் சுற்றி, கற்பூர தீபம் காட்டி பேருந்து பயணிகளுக்கு பேருந்தினுள் ஏறிச் சென்று பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்....

Similar News