ராமநாதபுரம் பீடிளைகள் பறிமுதல்

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ 50 லட்சம் மதிப்பிலான 945 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.;

Update: 2025-02-03 13:42 GMT
ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்படுவதாக க்யூ ப்ராஞ் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருப்புல்லாணி அடுத்த சேதுக்கரை கடல் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட க்யூ பிரிவு போலீசார் மற்றும் திருப்புல்லாணி போலீசார் இரண்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கடத்தல் பீடி இலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ரூ 50 லட்சம் மதிப்பிலான 945 கிலோ பீடி இலைகள் இருந்த நிலையில், இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, கடல் குதிரை, விவசாய உரங்கள் உள்ளிட்டவை கடல் வழியாகக் கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தங்க கட்டிகள் தமிழகத்துக்குள் கடத்தி வரப்படுகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவும், இதில் ஈடுபட கூடிய நபர்களை கைது செய்யவும் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மாவட்ட காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களது கண்காணிப்பையும் மீறி சமீபகாலமாக அதிக அளவு தங்க கட்டிகள் ஏடி இலைகள் கஞ்சா, மற்றும் விவசாய உரங்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேதுக்கரை பண்டாரா முனிகோவில் கடற்கரையில் இருந்து இன்று இலங்கைக்கு எந்தவிதமான முறையான அனுமதியோ ஆவணமோ இல்லாமல் பீடி இலைகளை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேதுக்கரை பண்டாரா முனிகோவில் கடற்கரைக்கு அதிகாலை அந்த பகுதிக்கு ரோந்து சென்ற கியூ பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது TN 74 AC 9662 Ashok Leyland Dost LS மற்றும் TN 65 AC 3188 TATA Super Ace ஆகிய இரண்டு வாகனங்களில் இருந்து வள்ளத்தில் பீடி இலைகளை ஏற்றி கொண்டு இருந்தவர்கள் அவர்களை கண்டதும் படகில் ஏற்றப்பட்ட பாதி பீடி பண்டல்களுடன் படகை எடுத்து கொண்டு கடலுக்குள் சென்று விட்டனர். இந்த நிலையில், கரையில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களில் இருந்த ஓட்டுனர்கள் மற்றும் நபர்கள் இரண்டு வாகனங்களையும் அதில் மீதம் இருந்த 27 பீடி இலை மூட்டைகளையும் ( தலா 35 கிலோ எடை கொண்ட )விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தப்ப விட்டுச் சென்ற இரண்டு வாகனங்களையும் மொத்தம் 945 கிலோ எடையுள்ள பீடி இலைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News