அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் சமபந்தி போஜனம் எம் எல் ஏ நிவேதா முருகன் பரிமாறினார்
பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் பெற்ற அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தியினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.;
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 56 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள அன்னதான கூடத்தில் அறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு பரிமாறி சமபந்தியினை தொடங்கி வைத்தார் மேலும் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கோவில் அர்ச்சகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செம்பனார்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.