அரசு புறம்போக்குநிலத்தில் மணல் மற்றும் மரத்தை வெட்டி எடுத்தவர்மீது புகார்
அரசுக்கு சொந்தமான புஞ்சை நிலத்தில் ஆற்றின் கரையோரம் சட்டத்திற்கு புறம்பாகமரத்தை வெட்டியும், மண் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்ட நபருடன் வந்து மனு அளித்து கோ;
:- தனிநபர் பராமரிப்ப உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்களையும் ஆற்றின் கரையோரம் மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோடு வந்து மணிவண்ணன் என்பவர் புகார் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் ஆக்கூர் சவுரியாபுரத்தில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 50 குழி புஞ்சை நிலம் அம்மனாற்றின் கரைஓரம் உள்ளது. மணிவண்ணன் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக பராமரித்து வருகின்றனர் அந்த இடத்தில் ஆற்றின் கரையோரத்தில் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் தூங்குமூஞ்சி வேம்பு மூங்கில் மரங்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெட்டி தன்னுடைய அனுபவத்தில் உள்ள இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக மண் எடுத்து செங்கல் சூளைக்கு பயன்படுத்தியும் விற்பனை செய்துள்ளார்கள் என்றும் உடனடியாக உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.