திருப்பரங்குன்றம் விவகாரம் மயிலாடுதுறையில் பாஜகவினர் கைது
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல மயிலாடுதுறை மாவட்ட பாஜகவினருக்கு போலீசார் தடை. மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவரை கைது செய்வதாக தெரிவித்ததால் பரபரப்பு;
:- திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்ட விவகாரம் மற்றும் சிக்கந்தர் மலை என்று உரிமை கொண்டாடுவது தொடர்பாக நாளை திருப்பரங்குன்றம் கல் மண்டபத்தில் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜகவினர் திருப்பரங்குன்றம் செல்லாதவாறு காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் நாஞ்சில் பாலு வீட்டிற்கு வந்த போலீசார் மண்டபத்திற்கு அழைத்து செல்வதாகவும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். உயரதிகாரி உத்தரவு மண்டபத்திற்கு வர வேண்டும் என்று அடக்கு முறையை போலீசார் கையாள்வதாகவும் மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு தெரிவித்தார். இதனையறிந்த பாஜகவினர் மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு வீட்டு முன்பு குவிந்துள்ளனர். முன்கூட்டியே கைது செய்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.