பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், மாணாக்கர்கள், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.;

Update: 2025-02-04 08:43 GMT
சிவகங்கை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணாக்கர்கள், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASAVI Postmatric Scholarship) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ – மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASAVI Postmatric Scholarship) திட்டமானது பிற்படுத்தப்பட்டேரர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ./ மி.பி.வ /சீ.ம மாணவ/ மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை (PM YASAVI Postmatric Scholarship) வழங்கப்படுகிறது. அதேபோன்று, முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புக்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், மாணாக்கர்கள் இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு, மாணாக்கர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கு University Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/) என்ற இணையதளத்தின் வாயிலாக, வருகின்ற 28.02.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்திடல் வேண்டும். அ) புதுப்பித்தல் மாணாக்கர் (Renewal Students i.e. 2nd , 3rd , & 4th Year in the year 2024-25) ஏற்கனவே, 2024-25 ஆம் ஆண்டில் 2,3 (ம) 4 ஆம் ஆண்டு கல்லூரியில் பயின்று கல்வி உதவித்தொகை பெற்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள், கல்வி உதவித் தொகை பெறுவதற்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அம்மாணாக்கர்களுக்கு, கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை, சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஆ) புதிய மாணாக்கர் (1st year student & the students who are not applied the scholarship during the year 2023-2024) நடப்பு கல்வியாண்டில் (2024-2025) புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில், கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பித்திடல் வேண்டும். மேலும், கல்வி உதவித்தொகை தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்கள் பெறலாம். எனவே, BC, MBC, & DNC வகுப்பைச் சார்ந்த மாணாக்கர்கள், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News