ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதி நிலை அறிக்கையை கண்டித்து மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்;
. மத்திய அரசு 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொழுது தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாமல் ஏழை நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் செய்யாமல் உயர்தர வகுப்பிற்கான சலுகை அளித்த மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் நகர ஒன்றிய செயலாளர்களான ரவிச்சந்திரன் துரைக்கண்ணு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன விளக்கங்களை எழுப்பினர் மேலும் பட்ஜெட்டை தயாரித்த நிர்மலா சீதாராமனை கண்டித்தும் முடிக்கங்களை எழுப்பினர் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத ஒன்றிய அரசை கண்டிக்கிறோம் என முழக்கமிட்டனர்.