ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்...*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்...*;

Update: 2025-02-05 13:23 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் பேருந்தை சிறைபிடித்து  சாலை மறியல்...*
  • whatsapp icon
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டமலை பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பக்கோட்டை தாலுகாக்களைச் சேர்ந்த 900 திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து 3 பேருந்துகளும், ராஜபாளையத்திலிருந்து 2 பேருந்துகளும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் இயக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு பயணிப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இந்நிலையில் இன்று கல்லூரி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு புறப்பட தயாரான போது, பேருந்துகள் ஏற்றிச்செல்ல வந்தது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் ஏற முடியாமல் காத்திருந்தனர். இதனால் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறை பிடித்து கல்லூரி முன் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஸ்டாலின் ஆட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கி மாணவர்களின் பயண பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News