வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.;

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்ஆய்வில், முத்துப்பேட்டை வட்டாட்சியர் தகுணசீலி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் குருமூர்த்தி, முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றியழகன், முத்துகுமரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.