சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு குளக்கரையில், விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி, அங்கு கணபதி ேஹாமம், வாஸ்து சாந்தி, யாக வேள்வி பூஜைகள் மற்றும் கோ பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. இதைத்தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.