கோவில் புலிக்குத்தி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேன் கைது*

கோவில் புலிக்குத்தி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேன் கைது*;

Update: 2025-02-06 09:20 GMT
விருதுநகர் அருகே கோவில் புலிக்குத்தி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேன் கைது விருதுநகர் அருகே கோவில்புலிக் குத்தி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வதுவார்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி(50) என்ற பெண் தொழிலாளி உயிரிழப்பு மேலும் பட்டாசு தொழிலாளிகள் 6 பேர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகன்ராஜ் மற்றும் ஆலையின் போர்மேன் செல்வகுமார் ஆகிய இருவர் மீது வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் பட்டாசு ஆலையின் போர்மேன் செல்வராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் மோகன் ராஜை தேடி வருகின்றனர்.

Similar News