ராமநாதபுரம் டாஸ்மாக்கை அகற்றக் குறி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது
அழகன்குளம் நாடார்வலசை டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்கள் குழந்தைகளுடன் கைது.;
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்திற்கு உட்பட்ட நாடார்வலசை மற்றும் அம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்னால் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர் அன்று இரவே டாஸ்மாக்கை அகற்றுவோம் என அதிகாரிகள் கூறியதை அடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர் .ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த டாஸ்மாக் கடையை திறந்து வியாபாரம் செய்ததாகவும் அப்பகுதி மக்கள் உடனடியாக ராமநாதபுரம் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் .முடிவு வராத நிலையில் இன்று நாடார்வலசை டாஸ்மாக் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்த நிலையில் , ஆர்ப்பாட்டம் செய்ய வந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர் மேலும் டாஸ்மாக் இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.