பட்டுக்கோட்டை நீதிமன்ற வழக்குரைஞா்கள் அறையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி படத்திறப்பு 

படத்திறப்பு;

Update: 2025-02-07 13:16 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் சங்க அறையில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திருவுருவப்படம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  பட்டுக்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சற்குணம் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் ஆகியோர் கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞர்கள் குழந்தைசாமி, ராமசாமி, செல்வராஜ், மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி மணவழகன், அரசு வழக்குரைஞர் சுப்பு. ஆறுமுகம், வழக்குரைஞர்கள் குழ.செ.அருள் நம்பி, மணிகண்டன், ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அறிவழகன் வரவேற்றார். நிறைவாக, பட்டுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்க செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Similar News