மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில் அனைத்து பணிகள் தயார்நிலையில் இருப்பதாக கூறிய மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா;

Update: 2025-02-07 13:52 GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.இதில் 2லட்சத்து 27ஆயிரத்து 546வாக்காளர்கள் கொண்ட கிழக்கு தொகுதியில் 67.97%வாக்குபதிவாகி உள்ளது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.இதற்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு 600காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா வாக்கு எண்ணிக்கை தயார் நிலையில் உள்ளது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா நாளை வாக்கு எண்ணிக்கை 7:30மணிக்கு தபால் வாக்கு அறை திறக்கப்படும்,இதன் பின்னர் மின்னனு வாக்கு இயந்திரம் அறை வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும்,தொடர்ந்து 8:30மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கப்படும், சர்வீஸ், சிறையில் இருப்பவர்கள், 85+வயது மேற்பட்டவர்கள் ஆகியோர் 246 பேர் தபால் வாக்குப் செலுத்தி உள்ளனர்.மின்னனு வாக்கு எண்ணிக்கைகாக 14மேஜைகளும் தபால் வாக்கு எண்ணிக்கை க்காக ஒரு மேஜை வைக்கப்பட்டுள்ளது, வாக்கு எண்ணிக்கை பணியாளர்களுக்கு இருமுறை பயிற்சி அளிக்கப்பட்டது,தபால் வாக்கு எண்ணிக்கை பணியை கண்காணிக்க ஒரு ஏஆர்ஓ இருப்பார், ஒவ்வொரு மேஜைக்கு ஒரு சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,விவிபேட் இயந்திரம் டேபிள் ஒன்றில் வைத்து எண்ணப்படும்,வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும்,மொத்தமாக வாக்கு எண்ணிக்கை 17சுற்று வாக்கு எண்ணிக்கை முதல் சுற்றுக்கு சற்று காலதாமதம் ஏற்படும் இதையடுத்து அடுத்தடுத்து சுற்றுக்கள் குறைந்தபட்சம் 25 நிமிடத்தில் முடிவுகள் தெரிவிக்கப்படும் என கூறினார்.இதனை தொடர்ந்து பேசிய ராஜகோபால் சுன்கரா வாக்குப்பதிவின்போது பரிதாபேகம் என்ற வாக்காளர் வாக்கு மாறி போடப்பட்ட வாக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டது இதன் பின்னர் டென்டர் ஓட்டு போடுவதற்கு அந்த நபருக்கு வாய்ப்பு வழங்கிய போதும் பரிதாபேகம் அதனை பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் எக்ஸ் வலைதளத்தில் வாக்குப்பதிவு செலுத்தியது போன்று வீடியோ வெளியிட்ட நபர் மீது தேர்தல் சட்ட பிரிவின் கீழ் 128 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்...

Similar News