சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மையின் உடைந்த கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல்லின் உடைந்த பாகம் ஆகியவை கண்டெடுப்பு.*
சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மையின் உடைந்த கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல்லின் உடைந்த பாகம் ஆகியவை கண்டெடுப்பு.*;
விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மையின் உடைந்த கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல்லின் உடைந்த பாகம் ஆகியவை கண்டெடுப்பு. வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மையின் உடைந்த கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல்லின் உடைந்த பாகம் ஆகியவை கண்டெடுப்பு. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.மார்ச் இறுதியில் பணியானது முடிவடையும் என எதிர் பார்க்கும் நிலைமையில் பணியானது விருவிருப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது.அதில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டதில் பணிகள் முழுமையாக முடிந்த குழிகளில் அளவீடும் பணிகள் முடிக்கப்பட்டு குழிகளை மூடும் பணியில் தொழிலார்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை 18 குழிகளில் சுடுமண் முத்திரைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள், சுடுமண் விளக்குகள்,தங்க அணிகலன்,சூது பவளமணி,உட்பட 3,350 க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் செய்த பணியின்போது சுடு மண்ணால், செய்யப்பட்ட உருவ பொம்மையின் உடைந்த கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல்லின் உடைந்த பாகம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறுகையில்,கிடைக்கப்பட்ட பளிங்கு கல்லை ஆபரணங்களை மெருகூட்டுவதற்கான மூலப் பொருளாக பயன்படுத்தி இருக்கலாம் எனவும்,மேலும் கிடைத்த பொருட்களை உடனுக்குடன் ஆவணப்படுத்தும் பணியும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.