யுஜிசி அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் யுஜிசி அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்..;
யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை படிக்கும் யுஜிசி அறிக்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிடக் கோரியும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மாநில கல்வி நிதியை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கலைக் கல்லூரிகளில் பல்வேறு அமைப்பினர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.