காவலர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பண மோசடி செய்த இருவர் கைது.

திருவாரூரில் காவலர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பண மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2025-02-07 16:35 GMT
திருவாரூரில், காவலர் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், போலீசார் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் இச்சங்கத்தின் செயலாளர் ஜெயகாந்தன் சங்க நிதியை கையாடல் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற் கொண்ட விசாரணையில் கடந்த 2021 முதல் 2023 வரையிலும் ரூ. 79 லட்சத்து 54 ஆயிரம் பண மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செயலாளர் மற்றும் உதவியாளர் முருகதாஸ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவலர் கூட்டுறவு கடன் சங்கத்திலேயே பண மோசடி விவகாரம் போலீசார் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Similar News