கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கம்..
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில், திருவாரூர் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழிப்போம் என உறுதியளித்து கையெழுத்து இடுகிறோம் என்ற வாசகத்திற்கு கீழ் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தனது முதல் கையெழுத்தினையிட்டு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஸ்ரீதர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.