மாரியம்மன் ஆலய தை மாத கடைசி வெள்ளிக்கிழமை உற்சவம்
மயிலாடுதுறை கொத்தத்தெரு பெரிய மாரியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்:-;
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கொத்தத்தெருவில் மிகப் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கோயில் வளாகத்தில் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்யப்பட்டு பலவண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஊஞ்சலில் எழுந்தருளிய பெரிய மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.