காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் 'ரெய்டு'
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை;
காஞ்சிபுரம் மாநகராட்சியில் கண்ணன், 50, என்பவர் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அவென்யூ பகுதியில் இருக்கும் அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், கணக்கில் வராத 2.16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவர், மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு இணைப்பு வழங்கியதும் தெரியவந்துள்ளது.