நாய்கள் தொல்லை அதிகரிப்பு பீதியில் உத்திரமேரூர் வாசிகள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை;

Update: 2025-02-08 04:37 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 27,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இப்பகுதிவாசிகள் பேரூராட்சியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும்போது, கும்பலாக சுற்றித்திரியும் நாய்கள் சிறுவர்கள், வாகன ஓட்டிகள், பகுதிவாசிகளை விரட்டி கடிக்க பாய்கிறது. மேலும், வெளியூர்களில் இருந்து பல்வேறு பணிகள் நிமித்தமாக, உத்திரமேரூருக்கு வருவோரும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சமீப காலங்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News