வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை;

Update: 2025-02-08 12:24 GMT
தமிழகத்தில் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 11-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட சென்னை மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மாவட் டத்தில் வருகிற 11-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படு கிறது. அத்துடன், டாஸ்மாக்கடையுடன் இணைந்து செயல்படும் பார் கள், எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை அனைத்து பார்களும் இயங் காது. மேற்கண்ட நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்கு மார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News