மத்திய பட்ஜெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்;
நாகை அவுரி திடலில், நிதிநிலை அறிக்கையில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்திற்கு போதிய நிதியை ஒதுக்காததை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன பழனிச்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்ஜெட் நகலை எரிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டத்திலிருந்து போலீசாரை, கம்யூனிஸ்ட் கட்சியினர் கையால் தள்ளி விட்டு வெளியேற்றினர். தொடர்ந்து பட்ஜெட் நகலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.