காங்கேயம் பேருந்து நிலையம் அருகே பாஜக வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் ரவுண்டானா முன்பு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றியை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ;

Update: 2025-02-08 13:52 GMT
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் திருமதி.S.மோகன பிரியா தலைமையில்  பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் காங்கேயம் நகர பாஜக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News