பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக இலவச மருத்துவம் மற்றும் மோடி டி, வழங்கிய பாஜகவினர்.

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக இலவச மருத்துவம் மற்றும் மோடி டி, வழங்கிய குண்டடம் தெற்கு மாவட்ட பாஜகவினர்.;

Update: 2025-02-08 15:09 GMT
பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு கோவை- நீலகிரி- திருப்பூர்  இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர் . அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் களைப்பு தெரியாமல் இருக்க திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சி சார்பில். பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமார் தலைமையில் கோவை தாராபுரம் மெயின் ரோட்டில் பிரம்மாண்ட செட் அமைத்து அதில் பக்தர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் கொடுத்து காவடி தூக்கி வரும் பக்தர்களுக்கு.காப்பி, பூஸ்ட், சுக்கு காபி, பால், மற்றும்,இளநீர் லெமன்,ஜூஸ் சுண்டல், பிஸ்கட், மினரல் வாட்டர்..  மருந்து பொருட்கள்: தைலம்  மாத்திரைகள் பேண்டேஜ் மற்றும் Reflection stickers. ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.. இந்த விழாவில். கொங்கு ரமேஷ். ஈஸ்வரன். சுகுமார். ஸ்ரீராம்,  வெங்கடாசலம், கே. அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு மேற்கண்ட பொருட்கள் வழங்கினர் இதில் ஏராளமான பாஜகவினர் மற்றும் பழனி பாதயாத்திரை பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News