ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையை கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கும் மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.;
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது . இக்கண்டன கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி மற்றும் மாநில பிரச்சாரக்குழு செயலாளர் சேலம் சுஜாதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் , ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாநில - மாவட்ட கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய, கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.