பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர்

முதுகலை பட்டதாரியை கடத்தி சென்று திருமணம்   சமூக வலைதளங்களில் போட்டோ வெளிட்ட நபரை கைது செய்யக்கோரி பெண்ணின்தாய் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு   பொறையார் போலீசார் வழக்கு பதிவு;

Update: 2025-02-09 01:42 GMT
மயிலாடுதுறை அருகே  எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தராம்பாளின்  23வயது மகள் தினந்தோறும் மினி பேருந்து மூலம் பொறையார் சென்று தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஜனவரி 27 ஆம் தேதி இரவு வீட்டிலிருந்த அவரை காணவில்லை.   அவரைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் அரசலங்குடியை சேர்ந்த மோகன கண்ணன்(40) என்ற மினி பேருந்து ஓட்டுநர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்ட போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த மோகனகண்ணண் குடிபோதையில் தாம்பத்திய உறவில் துன்புறுத்தலால் பல பெண்கள் இவரிடமிருந்து ஓடிவிட்டனர்.  திருமணமான ஒரே வாரத்தில் காயத்ரி என்ற பெண் இவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.  இதுபோன்ற தகவல்களை கேள்விப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர்,  மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மீண்டும் புகார் மனு ஒன்றை அளித்து  தன் பெண்ணை கடத்திச் சென்ற மோகன கண்ணன்மீது வழக்கு பதிவு கைது செய்தும் தன் மகளை மீட்டு தரவும் கோரியிருந்தார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் நம்பிக்கை தெரிவித்

Similar News