தொழிலாளர்கள் பற்றாக்குறை

காலிங்கராயன் பாசன பகுதியில் இறுதிக்கட்ட உழவுப்பணி விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை;

Update: 2025-02-09 08:32 GMT
ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில், இறுதிக்கட்ட உழவுப்பணி நடைபெற்று வரும் நிலையில், விவசாய கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கான, கடந்த ஜனவரி முதல் நீர் வினியோகிக்கப்படுகிறது. 90 கி.மீ நீளமுள்ள வாய்க்கால் மூலம், 15 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதியில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் பயிர் செய்யப்படும். குறிப்பாக, ஈரோடு வைரபாளையம், கருங்கல்பாளையம், வெணிப்பாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 2ம் சாகுபடிக்கான நாற்று நடவு பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில், இறுதிக்கட்ட உழவுப்பணிகள் நடைபெற்று வருகிறது. உழவுப்பணியை விரைந்து முடிக்க டிராக்டர், டில்லர்கள் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.  இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது :  காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் இறுதிக்கட்ட உழவுப்பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் நாற்று நடவுப்பணிகள் நிறைவடைந்திருக்கிறது. ஒரே நேரத்தில் உழவுப்பணியை மேற்கொள்ள பாசன பகுதி முழுவதும் இருந்து அழைப்பு வருவதால், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News