வார விடுமுறை என்பதால் வேளாங்கண்ணியில் திரண்ட பக்தர்கள்
முடி காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்;
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கடற்கரை நகரமான வேளாங்கண்ணி ஆன்மீக தளமாக மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், வேளாங்கண்ணிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். பேராலயத்தில் நடைப்பெறும் சிறப்பு திருப்பலிகள், பழைய மாதா கோவில், சிலுவை பாதை, நடுத்திட்டு, தியான கூடம், சிறுவர் பூங்கா, மாதா குளம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றினர். அதே போன்று, கடற்கரை சாலையில் அமைந்துள்ள கடைகளில் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். வேளாங்கண்ணி கடற்கரையில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் உற்சாக நீராடியும் , செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.