தனியார் பள்ளியின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி ....

தனியார் பள்ளியின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி ....;

Update: 2025-02-09 11:00 GMT
விருதுநகரில் தனியார் பள்ளியின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி .... விருதுநகரில் உள்ள பி.ஏ.சிதம்பரம் நாடார் பெண்கள் ஆங்கில பள்ளியின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பெண்களுக்கான மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி,சாத்தூர், போன்ற பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியானது சத்திரியபெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி தெப்பம், மெயின்பஜார், மாரியம்மன் கோவில், கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று பி.ஏ சிதம்பரம் நாடார் ஆங்கில பள்ளியில் நிறைவு பெற்றது. மேலும் இந்த மினிமாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் T.சர்ட் வழங்கப்பட்டது. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.

Similar News