வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது பவுன் நகை வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை.

குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது பவுன் நகை வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கபட்டது.  குமாரபாளையம் போலீசார் விசாரணை.செய்து வருகிறார்கள்.;

Update: 2025-02-09 16:12 GMT
வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது பவுன் நகை வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை.
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் அம்மன் நகர் பகுதியில் வசிப்பவர் தனபாலன், 50. . இவர் பெங்களூரில் உள்ள கட்டுமான தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி ராணி.  உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்றுமுன்தினம்  இரவு சென்ற நிலையில் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. நேற்று  காலை சுமார் எட்டு மணி அளவில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு, வெளியூர் சென்ற ராணி வந்திருப்பார் என குரல் கொடுத்துள்ளனர். ஆனால், வீட்டின் அருகில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தனபாலுக்கும், ராணிக்கும் மொபைல் போன்  மூலம் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த இருவரும், வீட்டில் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டிலிருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்டும், பீரோ உடைக்கப்பட்டும்,  அதிலிருந்து தங்க நகை மற்றும் பணமும் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து  குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரி பேரில் விரைந்து வந்த போலீசார் வீடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்பொழுது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தது மேலும்  சிசிடிவி காட்சிகளை பதிவு செய்யும் டி.வி.ஆர்.  திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News