தைப்பூசத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூடல்

மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை;

Update: 2025-02-10 05:09 GMT
நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது வள்ளலார் நினைவு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு, நாளை (செவ்வாய்) ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News