பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது
ஒரகடத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை;
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 25. இவர், படப்பையில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். படப்பையில் இவர் தங்கியிருந்த வீட்டின் அருகில் வசிக்கும் பெண் ஒருவர் குளிப்பதை, குளியல் அறையின் ஜன்னலில் இருந்து, வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்து, அந்த பெண் கூச்சலிட்டதையடுத்து, அந்த இளைஞரை பிடித்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் அப்பகுதிவாசிகள் ஒப்படைத்தனர். புகாரின்படி, போலீசார் சரவணனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.