இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் விபத்தில் சிக்கி காயம்
இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் விபத்தில் சிக்கி காயம்;
அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக டவுன் போலீசாருக்கு இன்று மாலை தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் யார் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்