காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு குவிந்த பொதுமக்களால் பரபரப்பு

காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு குவிந்த பொதுமக்களால் பரபரப்பு;

Update: 2025-02-10 11:20 GMT
காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு குவிந்த பொதுமக்களால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல், ஜெகஜீவன்ராம் காலனியில் வசித்து வரும் (ஆதிதிராவிடர் திராவிட மக்களுக்கு) இலவச வீட்டுமனை பட்டா வழங்க 1998 - ஆம் ஆண்டு அரியனேந்தல் பகுதியில் இடம் சுமார் 6.30 ஏக்கர் நிலம்கையகப்படுத்தப்பட்டது. அதில் 130 பேர் தேர்வு செய்யப்பட்டு தலா ஒருவருக்கு 2.47 செண்டு நிலம் வழங்கி இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்ப்பட்டது. இதனை தொடர்ந்து பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தல் 82 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு அவர்கள் அங்கு வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் மீதமுள்ள 48 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காரியாபட்டி தாசில்தார் அலுவலகத்தில் பணிக்கனேந்தல் மற்றும் ஜெகஜீவன்ராம் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆதிதிராவிடர் சமுதாய மக்களாகிய எங்களுக்குத்தான் அரசு ஒதுக்கிய இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அங்கு வந்த தாசில்தார் மாரீஸ்வரனிடம் கும்பலாக நின்ற மக்கள் மனுக்களை கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்டகாரியாபட்டி தாசில்தார் மாரீஸ்வரன் தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சென்றார் அதில் வந்த பொதுமக்கள் ஆதி திராவிட வகுப்பை சார்ந்த மக்களுக்கு தான் அந்த இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

Similar News