தேக்கி வைக்கப்பட்ட பாதாள சாக்கடை நீர் வாய்க்காலில் திறந்து விட்டதால் சாலை மறியல் போராட்டம்
மயிலாடுதுறை நகராட்சியின் பாதாளசாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் வெளியேறுவதை கண்டித்து கிராம மக்கள் இரவில் சாலை மறியல் போராட்டம்.;
மயிலாடுதுறை நகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் கடந்த 17 ஆண்டுகளாக சத்தியவான் வாய்க்காலில் திறந்து விடப்பட்டுவருகிறது. 25 கி.மீ.தூரரம்வரை செல்கிறது . இதனால் பாதிப்புக்குள்ளாகிவரும் ஆறு பாதி கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். சென்ற வாரம் செம்பனார்கோவில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக மயிலாடுதுறையில்அடைத்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை கழிவு நீரை திடீரென நேற்று வெளியேற்றியதால் அதிக துர்நாற்றம் வீசியது இதைக் கண்ட ஆறு பாதியில் அக்கிராம மக்கள் திடீரென்று இரவு நேரத்தில் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி காரைக்கால் நாகப்பட்டினம் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி, காவல் ஆய்வாளர் கருணாகரன், தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தும் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.