வீரக்குமாரசாமி கோவில் தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது;

Update: 2025-02-11 08:06 GMT
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீரக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுப்பார்கள். அதன்படி இந்த ஆண்டு வீரக்குமாரசாமி கோவில் மகா சிவராத்திரி தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவின் தொடக்கமாக நேற்று அறநிலையத் துறை அதிகாரிகள், கோவில் குலத்தவர்கள், பக்தர்கள் பங்கேற்று முகூர்த்தக்கால் போடப்பட்டது. அப்போது தேருக்கு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு 16-ந் தேதி காலை 9 மணிக்கு தேர் கலசம் வைத்தல், 26-ந் தேதி மாலை 5 மணிக்கு பள்ளய பூஜை, 27-ந் தேதி மாலை 3 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருள செய்தல், மாலை 5 மணிக்கு தேர் நிலை பெயர்த்தல், 28-ந் தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.மார்ச் மாதம் 1-ந் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை அடைகிறது. அதற்காக திருவிழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Similar News