ராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

சாயல்குடி அருகே ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்;

Update: 2025-02-11 09:50 GMT
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட உறைக்கிணறு கிராமத்தி அமர்ந்து அருள்பாலித்து வரும் கிராம தெய்வங்களான ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீபத்திரகாளி அம்மன், ஸ்ரீ உஜ்ஜயினி மகாளி அம்மன், ஸ்ரீசுடலைமாடசுவாமி, ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த தைமாதம் 26ம் தேதி முதலாம் யாகசாலை பூஜையானது மங்கள இசையுடன் ஸ்ரீமஹாகணபதி ஹோமம் சிறப்பு தீபாராதனையுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ஜெபபாராயணம், ஹோமம் நடபெற்றது. இதனைத் மாலை 5 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகபூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. மூன்றாம் கால யாகபூஜை விதுர்ண பாராயணம், தீபமந்திரங்கள், கும்பத்துக்கு சிறப்பு மலர்களாம் அலங்கரிக்கப்பட்டு புனிதநீர் ஆலயத்தில் வலம் வந்து காலை 7.15 முதல் 10.27 மணிக்குள் நான்காம் கால யாகபூஜை, கோ பூஜை, தீபாராதனையுடன் கடம்புறப்பாடு இதனைத் தொடார்ந்து சகல பரிவார தெய்வங்கள் சகிதமாக ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு உலக மக்கள் சுபிட்ஷமாக வாழவேண்டி திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்று சென்றனர். இந்த கும்பாபிஷேக சர்வசாதகத்தை அருள்மிகு ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் குருக்கள் சிவஸ்ரீ நாகராஜன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தார். கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிநடைபெற்ற அனைத்து நாட்களும் பக்தர்களுக்கு பொது அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறைக்கிணறு சத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகளுடன் கிராம பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News