செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் வழங்கும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப்போட்டி குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்
செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் வழங்கும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப்போட்டி குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டார்.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் வழங்கும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப்போட்டி குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வெளியிட்டார். வளரும் தமிழ் மொழிநுட்பத் தேவைகளை ஈடு கொடுத்துப் புதிய படைப்புகளை உருவாக்க, செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் முன்னெடுப்பில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN)- உடன் இணைந்து தமிழி என்ற நிரலாக்கப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. திரள் தளத்துடன் ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN)- உடன் வாணி பிழைதிருத்தி, அக்ரிசக்தி, தமிழ் அநிதம், சிஐஎஸ்-ஏ2கே போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நடக்கும் இந்தத் தமிழ் மொழிநுட்ப நிரலாக்கப் போட்டியில் மாணவர்களும், மொழி வல்லுநர்களும், தொழில்முனைவோர்களும் கலந்து கொள்ளலாம். சந்தைப்படுத்தக் கூடிய புத்தாக்கச் சிந்தனை தரும் போட்டியாளர்களுக்குப் படைப்புகளை வளர்த்தெடுக்கத் தேவையான ஊக்கத் தொகையும் அது சார்ந்த தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும். மேலும் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வழிகாட்டுதல்களும் பயிற்சியும் வழங்கப்படுவதால் தமிழில் தொழில்நுட்பப் புத்தாக்கங்களை உருவாக்கிச் சாதனை படைக்கலாம். எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள், மொழி வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் http://form.startuptn.in/TLTH என்ற கூகுள் படிவத்தினை 02.03.2025-க்குள் நிரப்பிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 78452-50039(தனபிரகாஷ்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.