தைப்பூசத்தை முன்னிட்டு அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு
விபூதி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை;
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தில் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வரும் வள்ளி, தெய்வானை சமேத ஒரு முகம் ஆறு திருக்கரங்களை கொண்ட அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு, தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு திரவியங்கள், பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், இளநீர், பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான, பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியரை வழிபட்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.