தேடப்படும் குற்றவாளிகள் என இருவரை நீதிமன்றம் அறிவிப்பு

குமாரபாளையம் கொலை வழக்கில் நீண்ட வருடமாக பிடிபடாத குற்றவாளிகள் இருவரை, தேடப்படும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.;

Update: 2025-02-11 12:28 GMT
குமாரபாளையம் கொலை வழக்கில் நீண்ட வருடமாக பிடிபடாத குற்றவாளிகள் இருவரை, தேடப்படும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: குமாரபாளையத்தில் 2002ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில், குமாரபாளையத்தை சேர்ந்த பாவா என்கிற கோவிந்தராஜ், சுருட்டையன் என்கிற சிவா ஆகியோர் இதுவரை பிடிபடாமல் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரை திருச்செங்கோடு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News