எட்டுக்குடி முருகன் கோவிலில் தைப்பூச விழா
பக்தர்களின் கூட்டம் அலைமோதியது;
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில், முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் எட்டுக்குடிக்கு வந்த பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நாகை மட்டுமின்றி, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்டு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.