மயூரநாதர் ஆலய குமரக்கட்டளை சுப்பிரமணியசாமி தைப்பூச விழா

Update: 2025-02-12 04:21 GMT
. மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் சுவாமி கோயிலில் உள்ள ஆறுமுகர் சுவாமி மற்றும் குமரக்கட்டளை வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு தைபூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா நடைபெற்றது. கூறைநாடு கஸ்தூரிபாய் ஶ்ரீமன்மதசுவாமி உடனுரை ஶ்ரீவள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஶ்ரீ மாயூரநாதர் ஆலயம் வந்தடைந்து குமரக்கட்டளை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இதேபோல் பெரியார் ராமசாமி தெரு காவடிகள், கஸ்தூரிபாய் தெரு மேற்கு, ஈவேரா தெருவாசிகள் அலகுகாவடி பால்குடம், பன்னீர்காவடி பால்காவடிகள் எடுத்து மாயூரநாதர் கோயிலை வந்தடைந்து கோயிலில் உள்ள ஆறுமுகர் சன்னதியில் பக்திபரவசத்துடன் நடனமாடி காவடிகளை இறக்கி வைத்து ஆறுமுகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மாவிளக்கிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தாகள் மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள ஆறுமுகர், மற்றும் குமரக்கட்டளை சுப்ரமணியர் சுவாமி சன்னதிகளில் தரிசனம் மேற்கொண்டனர்.

Similar News