பெரியகோயிலில் கயிலாய வலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஆன்மீகம்;

Update: 2025-02-12 04:59 GMT
பௌர்ணமியையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் திரு தென் கயிலாய வலம் வரும் நிகழ்ச்சி 2024, செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தை மாத பௌர்ணமியையொட்டி, திரு தென் கயிலாய வலம் வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. இதில், சிவ வாத்தியங்கள் முழங்க, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருச்சுற்றை வலம் வந்தனர். இந்த கயிலாய வலம் புதன்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.

Similar News