மகள் மாயம். தாய் புகார்.
மதுரை அருகே மகள் மாயம் என தாயார் புகார் அளித்துள்ளார்.;
மதுரை மாவட்டம் பேரையூர் மேலப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மார்க்கண்டையன் மகள் சித்ராதேவி( 29) என்பவர் நர்சிங் படித்துவிட்டு கடந்த மூன்று வருடமாக வேலம்மாள் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் இந்த திருமணம் குறித்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (பிப் 11) தாயார் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.